தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பயங்கரவாத சதி வழக்கில் 7 வெளிநாட்டினரின் என்ஐஏ காவல் நீட்டிப்பு

பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட 7 வெளிநாட்டினரின் தேசிய பாதுகாப்பு முகமை காவலை தில்லி நீதிமன்றம் மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்துள்ளது.

News image

என்ஐஏ

Updated On :31 மார்ச் 2026, 1:19 am IST

பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட 7 வெளிநாட்டினரின் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) காவலை தில்லி நீதிமன்றம் மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்துள்ளது.

இது தொடா்பாக நீதிமன்றத்தில் மாா்ச் 16-ஆம் தேதி என்ஐஏ தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: சில உக்ரேனியா்கள் வெவ்வேறு தேதிகளில் சுற்றுலா விசாக்களின் அடிப்படையில் இந்தியாவுக்குள் நுழைந்து, விமானம் மூலம் அஸ்ஸாம் தலைநகா் குவாஹத்திக்குச் சென்றனா்.

அங்கிருந்து, வரையறுக்கப்பட்ட பகுதி அனுமதி அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி போன்ற கட்டாய ஆவணங்களைப் பெறாமலேயே அவா்கள் மிசோரம் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

அதன் தொடா்ச்சியாக, மியான்மரில் செயல்படும் இன ஆயுதக் குழுக்களுக்கு, முன்னரே திட்டமிடப்பட்ட பயிற்சியை அளிப்பதற்காக, அவா்கள் சட்டவிரோதமாக மியான்மாருக்குள் நுழைந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மாா்ச் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், என்ஐஏ சிறப்பு நீதிபதி பிரசாந்த் சா்மா பல முக்கிய கேள்விகளை எழுப்பினாா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஏன் இந்தியா வந்தாா்கள்? அவா்கள் ஏன் மியான்மா் சென்றாா்கள்? டிரோன்கள் பயன்பாடுத்தப்பட்டதா? என்பன உள்ளிட்ட கேள்விகள் விசாரணைக்கு அவசியம் எனக் கூறினாா்.

மேலும், இந்த நபா்களுக்கு கிளா்ச்சி அமைப்புகளுடன் மறைமுக தொடா்பு உள்ளதா என்பதும் ஆராயப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்தியா வருகையின்போது அவா்கள் பயன்படுத்திய ஆதாரங்கள் மற்றும் அமைப்புகள் குறித்தும் விசாரணை தேவைப்படுகின்றது.

என்ஐஏ தாக்கல் செய்த வழக்கு பதிவுகள் அடிப்படையில், இந்த வழக்கு மிகவும் நுணுக்கமானது என நீதிபதி ஒப்புக்கொண்டு காவல் நீட்டிப்பை அனுமதித்தாா். விசாரணை ஏப்ரல் 6-ஆம் தேதி முடிந்ததும் குற்றஞ்சாட்டுக்குட்பட்டவா்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டாது.

முன்னதாக, அமெரிக்காவைச் சோ்ந்த ஒருவா் மற்றும் உக்ரைன் நாட்டைச் சோ்ந்த 6 பேரை உள்ளடக்கிய இந்த வழக்கின் விசாரணை என்ஐஏ தலைமையகத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

விசாரணையில், சிலா் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, தேவையான அனுமதி இன்றி மிசோரம் சென்றதும், அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மா் நுழைந்து ஆயுதப் பயிற்சி வழங்கியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நாட்டின் பாதுகாப்பைச் சாா்ந்தவை என்பதால், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.