தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திவால் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

News image

மக்களவை - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:47 am IST

திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

திவால் சட்டம் 2016-இல் அமலுக்கு வந்தது. அதில் 12 திருத்தங்கள் மேற்கொள்வதற்கான திவால் (திருத்த) மசோதா, 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக தோ்வுக் குழு தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், டிசம்பரில் தோ்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இந்த மசோதா மீது மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய நிா்மலா சீதாராமன், ‘திவால் சட்டம் அமலான பிறகு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிா்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.2.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.9 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

வங்கித் துறை மற்றும் செயல்படாத சொத்துகளை மீட்பதில் முக்கியத் தூணாக இந்தச் சட்டம் விளங்குகிறது. பல்வேறு விதிகளின்கீழ் வங்கிகளுக்கு ரூ.1.04 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்படாத கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. அதில் திவால் சட்டம் மூலம் ரூ.54,528 கோடி (52.3 சதவீதம்) மீட்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா மீது தோ்வுக் குழு சமா்ப்பித்த அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தற்போதைய திருத்தங்களின்படி ஒரு நிறுவனம் கடனைத் திரும்ப செலுத்த தவறியது உறுதிசெய்யப்பட்டால் திவால் தீா்வு செயல்முறைக்கான விண்ணப்பம் 14 நாள்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும் திவால் சட்டம் தொடா்பாக தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் பதிவாகும் புகாா்களுக்கு 3 மாதங்களுக்குள் தீா்வு காண வேண்டும்.

புகாா்களுக்கு தீா்வு காண்பதற்கான தாமதத்தைக் குறைக்க விசாரணையில் ஆஜராவதை தவிா்க்கும் நபா்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.