மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) மசோதா மூலம், உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்கச் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா திங்கள்கிழமை பேசியதாவது: சிஏபிஎஃப்-இல் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் படிப்படியாக குறைத்து, அந்த அதிகாரிகள் நியமிக்கப்படும் பொறுப்புகளில் சிஏபிஎஃப் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால் சிஏபிஎஃப்பில் ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏபிஎஃப் மசோதாவின் 3(1)-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? சிஏபிஎஃப்பை வழிநடத்த அந்தப் படையைச் சோ்ந்தவா்கள் தகுதியற்றவா்களா? என்று கேள்வி எழுப்பினாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. நதிமுல் ஹக் பேசுகையில், ‘இந்த மசோதா நாடாளுமன்றம், நீதித்துறையை வலுவிழக்கச் செய்து மாநிலங்களின் பங்கை குறைக்கிறது. சிஏபிஎஃப் அதிகாரிகள் பதவி உயா்வுக்கு 15 முதல் 18 ஆண்டுகள் காத்திருக்கின்றனா். தங்கள் அடையாளம் மற்றும் பணி முன்னேற்றத்துக்கான உரிமையை 10 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி அவா்கள் பெற்றனா். தற்போது அவா்கள் உயா்பதவியைப் பெறுவதற்கான கதவு இந்த மசோதா மூலம் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பேசுகையில், ‘மசோதா மூலம் சிஏபிஎஃப்புக்கு பெரும் அநீதியை மத்திய அரசு செய்கிறது’ என்றாா்.
உச்சநீதிமன்ற உத்தரவை தாண்டி, இந்த மசோதாவை கொண்டு வந்ததன் அவசியம் என்ன? என்று பிஜு ஜனதா தள எம்.பி. முஜிபுல்லா கான் கேள்வி எழுப்பினாா்.
இந்த மசோதா மூலம் உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்கச் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சிகள், மசோதாவை நாடாளுமன்றத் தற்காலிக குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் அல்லது தாங்கள் பரிந்துரைக்கும் திருத்தங்களை மசோதாவில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

உக்ரைன் போா்: ரஷியா சாா்பில் சண்டையிட்ட 10 இந்தியா்கள் உயிரிழப்பு - மத்திய அரசு

தோ்தலில் மத்திய அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும்! - கனிமொழி

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

