மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தேசிய தலைவரான நிதின் நபின் தனது பிகார் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
பிகார் மாநிலம், பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜிநாமா கடிதத்தை, மாநில பாஜக தலைவர் சஞ்சய் சரோகி, பேரவைத் தலைவர் பிரேம் குமாரிடம் சமர்ப்பித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேம் குமார், "நிதின் நபினின் ராஜிநாமா கடிதத்தை சஞ்சய் என்னிடம் சமர்ப்பித்தார்.
அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளேன்," என்று தெரிவித்தார். அதேபோல், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
நிதின் நபின் மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக இதுகுறித்து நிதின் நபின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "இன்று, பாங்கிபூர் தொகுதியில் இருந்து பிகார் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை நான் ராஜிநாமா செய்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
கட்சி தனக்கு அளித்துள்ள புதிய பொறுப்பில் பாங்கிபூர் தொகுதி மற்றும் பிகாரின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நபின் தெரிவித்துள்ளார்.
Summary
BJP national president Nitin Nabin resigned as a member of the Bihar Assembly on Monday, two weeks after he was elected to the Rajya Sabha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?

எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


