கேமரூன் நாட்டில் நடைபெற்று வரும் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாட்டில், இணையவழி வா்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரி விலக்கை நீட்டிப்பது தொடா்பாக இந்தியா மற்றும் வளா்ந்த நாடுகளுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்னணு முறையில் பரிமாறப்படும் மென்பொருள்கள், மின்னணு புத்தகங்கள் மற்றும் தரவுகள் மீதான சுங்க வரி விலக்கை நிரந்தரமாக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும், இந்த வரி விலக்கு நீட்டிப்பால் தங்களுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், உள்நாட்டுக் கொள்கைகளை வகுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் கூறி இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன.
இதன் காரணமாக, 2 முதல் 4 ஆண்டுகள் வரை தற்காலிகமாக இந்த வரி விலக்கை நீட்டிக்கும் வகையில் ஒரு சமரச முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 2024-இல் அதிகரிப்பு: என்சிஆா்பி தகவல்

இந்தியா, சீனா உடனான உறவுகளில் சமநிலை அவசியம்: ரஷிய ஆய்வு அமைப்பு வலியுறுத்தல்

சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு!

சுங்க வரி செலுத்த இனி ‘யுபிஐ’ வசதி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
