இந்தியாவில் ஊரடங்கு அறிவிப்புக்கு வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ”அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவே வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஊரடங்கு எப்போது அறிவிக்கப்பட்டது? பாகிஸ்தானில்தான் ஊரடங்கு. இந்தியாவில் அல்ல.
வங்கதேசத்தின் நிலைமையைப் பாருங்கள். அவர்கள் துன்புறுவதை நான் குறிப்பிடவில்லை; ஓர் உண்மை ஒப்பீட்டுக்காகத்தான் சொல்கிறேன்.
ஒரு நல்ல அண்டை நாடாக, எந்த உதவி கோரப்பட்டாலும், எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் வழங்குகிறோம். அண்டை நாடுகளுடனான நல்லுறவை நாங்கள் பேணி வருகிறோம்.
மத்திய கிழக்கில் போர் காரணமாக, நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? உயர் ஆக்டேன் எரிபொருள் விலை 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலின் விலை ஒரே இரவில் சுமார் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், இப்போது லிட்டருக்கு 321 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தானில் கூட்டங்கள், பொது நிகழ்வுகளில் கட்டுப்படுத்தும்விதமாக ஸ்மார்ட் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அரசு அலுவலகங்களின் வேலை நாள்கள் வாரத்தில் 4 நாள்களாக மாற்றப்பட்டுள்ளன, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இவற்றில் எதையும் இந்தியாவில் நாங்கள் செய்யவில்லை. இருப்பினும், இந்தியாவில் ஊரடங்கு என்று சில தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இந்தியாவில் ஊரடங்குக்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Summary
No possibility of a lockdown in India, says Finance Minister Nirmala Sitharaman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

கலால் வரியைக் குறைத்ததன் காரணம் என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

