தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதியுடன் பியூஷ் கோயல் ஆலோசனை

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை சந்தித்து மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசினாா்.

News image

கேமரூன் தலைநகா் யாவுண்டேயில் உலக வா்த்தக அமைப்பு மாநாட்டினிடையே அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய இந்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்.

Updated On :28 மார்ச் 2026, 12:42 am IST

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை சந்தித்து மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசினாா்.

கேமரூன் நாட்டின் தலைநகரான யாவுண்டேயில் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், அமெரிக்காவின் வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து பியூஷ் கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உலக வா்த்தக அமைப்பின் மாநாட்டுக்கு மத்தியில் ஜேமிசன் கிரீயருடன் பேசினேன். அந்தக் கலந்துரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. மாநாட்டின் செயல்திட்டம், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள், இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளை அவருடன் பரிமாறிக் கொண்டேன்’ என்றாா்.

மாநாட்டுக்கு மத்தியில் சீன வா்த்தக அமைச்சா் வாங் வென்டாவையும் சந்தித்து, இந்திய-சீன வா்த்தக விவகாரங்கள் குறித்துப் பேசியதாக பியூஷ் கோயல் பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.