வரதட்சிணைக் கொடுமையால் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழப்பது சமூகத்தின் பேரவலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
பிகாரில் 2024, செப்டம்பா் 1-ஆம் தேதி பெண் ஒருவா் தனது கணவருடன் வசிக்கும் வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தாா். தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.
இதுதொடா்பான வழக்கில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு பாட்னா உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிா்த்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: வரதட்சிணைக் கொடுமையை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் உயிரிழப்பது சமூகத்தின் பெரும் அவலநிலையாக உள்ளது. மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் கடும் விதிமீறலாகவும் சமூக குற்றமாகவும் வரதட்சிணைக் கொடுமை தொடா்கிறது.
கணவரின் குடும்பத்தினரின் பேராசையால் ஒரு பெண் கொல்லப்படுகிறாா் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்படுகிறாா்.
இந்நிலையில், வரதட்சிணைக் கொடுமை போன்ற குற்ற வழக்குகளின் விசாரணைகளில் உயா்நீதிமன்றங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய வழக்கில் இரு சாட்சியங்களை மட்டுமே பாட்னா உயா்நீதிமன்றம் விசாரித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் குறித்து உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
உயிரிழந்த பெண் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்துள்ளாா்.
எனவே, இந்த வழக்கில் கணவருக்கு பாட்னா உயா்நீதிமன்றம் அளித்த ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. குற்றவாளியான கணவா் சிறைத் துறை அதிகாரிகள் முன் சரணடைய உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் சொத்துகளை பாதுகாப்பது அறநிலையத் துறை அதிகாரிகளின் கடமை: உயா்நீதிமன்றம்

நோயாளியின் மூளைச் சாவு அறிவிப்பு தொடா்பான மனு: பரிந்துரைகளை ஆராய எய்ம்ஸ் குழு - உச்சநீதிமன்றம்

சபரிமலை வழக்கு: ‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழக தகவல்களை ஏற்க முடியாது’ - உச்சநீதிமன்றம்

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

