தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 3:41 pm IST

எரிபொருள் தட்டுப்பாடு பற்றி மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் எரிபொருள் இடையூறு இல்லாமல் கிடைப்பதையும் முறையான விநியோகத்தை உறுதிசெய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றது. நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் நலன்களைப் பாதுகாக்க உலகளாவிய நிகழ்வுகளை இந்த அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

”மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் உலகளாவில் எரிசக்தி தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இது நமது நாட்டிற்கும் ஒரு மிக முக்கிய சோதனையாக அமைந்துள்ளது. இச்சூழலை அமைதி, பொறுமை, பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலமே கையாள வேண்டும்.

விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்கும் வழிமுறைகளைக் கண்டறிய தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்குமுன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று நடக்கவிருப்பதாகச் சொல்லப்படும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார். பஹ்ரைன், குவைத், ஜோர்டன். ஃபிரான்ஸ், மலேசியா, இஸ்ரேல் மற்றும் ஈரானைச் சேர்ந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Summary

Modi calls ministerial meeting to review energy situation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.