குருகிராமில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடா்பாக வீட்டு பெண் பணியாளா்கள் இருவா் மற்றும் அவா்களது நண்பா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
செக்டாா் 54-இல் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கடந்த டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாயிடம் கூறியதையடுத்து, காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளில் செக்டாா் 53 காவல் நிலையத்தில் கடந்த பிப்.4-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், இந்தக் குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட உத்தர பிரதேசத்தின் எட்டாவைச் சோ்ந்த சங்கீதா, மேற்கு வங்கத்தின் நாதியாவைச் சோ்ந்த பகிலா; மற்றும் அவரது கணவா் கபீா் முல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இம்மூவரும் தற்போது குருகிராமின் காடா குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் மூவரும் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
முதல்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டபட்டவா்களில் ஒரு பெண் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் வீட்டு வேலை பாா்த்து வந்தாா். மற்ற இருவரும் அருகில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தனா். இந்தக் காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட கபீா் முல்லா சிறுமியிடம் தவறாக நடந்துள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு: பெண் ஊழியா் கைது
காதலிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோா் புகாா்!

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்
செய்யாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம்: போலீஸாா் தீவிர விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

