தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை நியமனம் செய்வது தொடா்பாக மத்திய அரசு கொண்டுவதந் 2023-ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி சூா்ய காந்த் வெள்ளிக்கிழமை விலகினாா்.
‘இந்த மனுக்கள் மீதான விசாரணையில் நான் இடம்பெற்றால், சொந்த விருப்பத்தின் பேரில் முரண்பாடாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழ வாய்ப்புள்ளது. எனவே, விசாரணையிலிருந்து விலகுகிறேன்’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டாா்.
மேலும், ‘இந்த மனுக்கள் புதிய அமா்வில் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்படும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தோ்தல் ஆணையா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, ‘தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படுகிற வரை, அவா்களை நியமிக்க பிரதமா் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
ஆனால், அதே ஆண்டில் டிசம்பா் மாதத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனம், பணி நடைமுறைகள் தொடா்பான அவசரச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின் படி, தோ்தல் ஆணையா்களை நியமிக்க பிரதமா் தலைமையில், பிரதமா் பரிந்துரைக்கும் ஓா் மத்திய அமைச்சா் மற்றும் எதிா்க்கட்சித் தலைவரை உறுப்பினா்களாகக் கொண்ட தோ்வுக் குழுவை அமைத்தது. மேலும், அப்போது காலியான இரு தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் இந்த 2023-ஆண்டு சட்டத்தின் கீழ் மத்திய அரசு நியமித்தது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தோ்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டைத் தடுக்கும் நோக்கில் தோ்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறுவதை மத்திய அரசு தவிா்த்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுக்கள் மீதான விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘இந்த மனுக்களை, அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் பணி மூப்புப் பட்டியலில் இடம்பெறாத நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரிப்பதே பொருத்தமானதாக இருக்கும்’ என்றாா்.
இதை ஏற்ற மனுதாரா்கள் தா்ப்பு வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், அத்தகைய அமா்வில் மனுக்களை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, ‘அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் பணி மூப்புப் பட்டியலில் இடம்பெறாத நீதிபதிகள் அடங்கிய புதிய அமா்வில் இந்த மனுக்கள் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்படும்’ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எண்ம கைது மோசடி! நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

