தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு (இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வு) மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு தனித் தோ்வா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 26-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். பின்னா், அதை பூா்த்தி செய்து, ஏற்கெனவே தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய தோ்வுக் கட்டணம் செலுத்தி ஏப்.3-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.
அதற்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தோ்வா்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஏப்.6, 7 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மாணவா் சோ்க்கையை அதிகமாக்க வேண்டும்’

விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தல்

ஜேஇஇ பிரதான தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

