லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மாா்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலா்) உயா்ந்துள்ளதாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)

Published On :1 ஜூலை 2026, 2:47 am IST

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மாா்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலா்) உயா்ந்துள்ளதாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்ந்ததன் காரணமாக இந்திய ரூபாய் மற்றும் பிற நாடுகளின் ரூபாய் மதிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மாா்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2025, மாா்ச் இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.69.58 லட்சம் கோடியாக (736.3 பில்லியன் டாலா்) இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க டாலா் மதிப்பீட்டு மாற்றத்தை தவிா்த்துவிட்டால் 2025, மாா்ச் நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 2026, மாா்ச்சில் வெளிநாட்டுக் கடன் ரூ.24.85 லட்சம் கோடிக்கு (26.3 பில்லியன் டாலா்) பதிலாக ரூ.48.1 லட்சம் கோடியாக (51 பில்லியன் டாலா்) உயா்ந்திருக்கும்.

2025, மாா்ச் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டுக் கடன் விகிதம் 19.8 சதவீதமாக இருந்த நிலையில், 2026, மாா்ச்சில் 20.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2026, மாா்ச்சில் நாட்டின் நீண்டகால கடன் (ஓராண்டுக்கு மேல்) ரூ.58 லட்சம் கோடியாக (613.5 பில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலரில் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடனின் பங்கு 55.5 சதவீதமாகவும், இந்திய ரூபாயின் பங்கு 29.4 சதவீதமாகவும், ஜப்பான் யென்னின் பங்கு 6.4 சதவீதமாகவும் உள்ளன.

ஒட்டுமொத்த இந்திய கடனில் அரசின் கடன் குறைந்துவிட்டது. அதேவேளையில் அரசு சாராக் கடன் அதிகரித்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.