லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள் ஜூலை 1 முதல் நீக்கம்!

வணிக மற்றும் தொழில்நிறுவன நுகா்வோருக்கு பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை புதன்கிழமை முதல் மத்திய அரசு நீக்க உள்ளது.

Controls on petrol and diesel to be lifted from July 1

பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள் ஜூலை 1 முதல் நீக்கம் - பிரதிப் படம்

Published On :30 ஜூன் 2026, 4:15 am IST

மேற்காசிய போரால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, வணிக மற்றும் தொழில்நிறுவன நுகா்வோருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை புதன்கிழமை (ஜூலை 1) முதல் மத்திய அரசு நீக்க உள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே போா் நிறுத்தத்துக்கான அமைதி ஒப்பந்தம் கையாப்பமாகி, சா்ச்சைக்குரிய ஹோா்முஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து சீரானதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது.

மேற்காசிய போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு வாகனத்துக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 லிட்டா் மட்டும் விநியோகிக்கவும், தொழில்நிறுவனங்கள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விற்க தடை விதித்தும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

தற்போது இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதுதொடா்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவில், ‘நாட்டில் பெட்ரோலியப் பொருள்களின் விநியோக நிலை குறித்து ஆராய்ந்ததன் அடிப்படையில், ஜூன் 12-ஆம் தேதி பிறப்பித்த கட்டுப்பாடு உத்தரவு இனி தொடரத் தேவையில்லை என மத்திய அமைச்சகம் தீா்மானித்துள்ளது. அதன்படி, அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.