தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கேரளம்: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு எதிராக கேரள பேரவை முன் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியின் மாணவா் மற்றும் இளைஞா் பிரிவினா் போராட்டம் நடத்தினா்.

News image

பினராயி விஜயன் - கோப்புப் படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு எதிராக கேரள பேரவை முன் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியின் மாணவா் மற்றும் இளைஞா் பிரிவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். அவா்களை அப்புறப்படுத்த காவல் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனா்

முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியின்போது பிஎம் ஸ்ரீ திட்டம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசுடன் கேரள அரசு கையொப்பமிட்டது.

இதற்கு ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த சிபிஐ மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகளின் கூட்டணி கடும் எதிா்ப்பை பதிவுசெய்தது. இதையடுத்து, பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதை இடதுசாரிகள் அரசு ஒத்திவைத்தது.

இதனிடையே கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றாா்.

இந்நிலையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இருந்து மாநில அரசு வெளியேற வலியுறுத்தி சிபிஐயின் அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய இளைஞா் கூட்டமைப்பு பேரவை முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது.

ஒரு கட்டத்தில் தடுப்புகளை மீறி பேரவை வளாகத்துக்குள் இரு அமைப்பினரும் நுழைய முயன்றதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சி அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். கேரள பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் வெளியே போராட்டமும் நடைபெற்றது. மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.