அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இந்தியா முழுவதும் திருடுபோன 488 பழங்கால கலைப் பொருள்கள்!

இந்தியா முழுவதும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பழங்கால கலைப் பொருள்களில் 488 பொருள்கள் காணாமல் போனதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

இந்தியா முழுவதும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பழங்கால கலைப் பொருள்களில் 488 பொருள்கள் காணாமல் போனதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள பழங்கால கலைப் பொருள்களில் கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை 488 பொருள்கள் திருடுபோனதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 19 மாநிலங்களில் உள்ள கலைப் பொருள்கள் இவ்வாறு திருடுபோயுள்ளன. அதில், பல பொருள்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 319 பொருள்கள் திருடுபோயுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு வரை திருடுபோன பொருள்கள் பட்டியலில், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், 1960-களுக்கும் 2000-களின் முற்பகுதிக்கும் இடையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோயில்கள், கோட்டைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் சிற்பக் கூடங்களில் இருந்து பல திருட்டுகள் நடைபெற்றதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

பட்டியலில் உள்ள சில பொருள்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டிருந்தாலும், சுமார் 420-க்கும் மேற்பட்ட சிற்பங்கள், சிலைகள், கட்டிடக்கலைப் பொருள்கள் மற்றும் வரலாற்றுப் பொருள்கள் போன்றவை இன்னும் கண்டுபிடித்து மீட்கப்படவில்லை. கிட்டத்தட்ட 3,697 பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் இந்திய தொல்லியல் துறையிடம் கூட காணாமல்போன பல பொருள்களின் புகைப்படங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் ஆய்வு நடைபெறும் தளங்கள் பலவும் பரந்த பகுதிகளில் இருப்பதால் திருட்டுகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் யதுபீர் சிங் ராவத் பேசுகையில், “சமீபத்தில் எந்தத் திருட்டும் நடைபெறவில்லை. எந்த ஆதாரங்கள், ஆவணங்களின்றி பொருள்களை மீட்பது கடினம். நம் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பல பழங்கால பொருள்களை மீட்டு இந்தியா கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது” என்றார்.

Story image

TNIE

திருடப்பட்ட பழங்கால கலைப்பொருள்களில் குறிப்பிடத்தக்கவை:

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ மல்லிகார்ஜுனர் கோயில் மண்டபத்தின் மேற்கூரையில் இருந்த தாமரை.

கர்நாடகத்தின் அவனியில் உள்ள 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்த நந்தியின் கல் சிற்பம்.

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள விருத்த காலேஷ்வர் கோயிலில் இருந்த சமபங்க கோலத்தில் நிற்கும் விஷ்ணு சிலை.

தில்லியில் உள்ள இந்தியப் போர் நினைவிடத்தில் இருந்த முகலாய காலத்தைச் சேர்ந்த தந்தக் கைப்பிடி கொண்ட ஒரு கத்தி.

Summary

488 ancient artifacts stolen from across India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.