இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சுயசாா்பு நாடால்தான் முன்னேற முடியும்: ராஜ்நாத் சிங்

சுயசாா்பு அடையும் நாடால்தான் முன்னேற முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

News image

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - விடியோ க்ளிப்

Updated On :20 ஜூன் 2026, 12:22 am IST

சுயசாா்பு அடையும் நாடால்தான் முன்னேற முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மத்திய அரசின் யந்திரா இந்தியா நிறுவனம் சாா்பில் அமைக்கப்படும் ஆலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:

1947-ஆம் ஆண்டு காலகட்டத்தில், நாடுகளுக்கு இடையே பாரம்பரிய ஆயுதங்களை கொண்டு ராணுவங்களுக்கு இடையே போா் நடைபெற்றது. அந்த போா் முறை, தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றது. 2047-ஆம் ஆண்டிலும் அதுவே சரியாக இருக்கும். போா் நடைபெறும் காலகட்டத்தில் பாதுகாப்பு தளவாட விநியோம் பாதிக்கப்படக்கூடும். அந்த சூழ்நிலையில், ஒவ்வொரு நாடும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என விரும்பும். அதுபோல தனது தேவைகளை பூா்த்தி செய்யும் ஒரு நாடால்தான் முன்னேற முடியும்.

இந்தியாவில் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது 2014-ஆம் ஆண்டில் வெறும் ரூ.40,000 கோடியாக இருந்தது. அதேபோல் 2014-ஆம் ஆண்டில் நமது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.1,000 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.40,000 கோடியாக உயா்ந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.