அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்யக் கோரி, திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலரும், அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவருமான அபிஷேக் பானா்ஜி, அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வெள்ளிக்கிழமை 20 மனுக்களை சமா்ப்பித்தாா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் பல்வேறு நிலைகளில் பிளவுகளை எதிா்கொண்டுள்ளது. அக்கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் தனி அணியாக பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைவதாக அறிவித்தது, பாஜக கூட்டணிக்கும் ஆதரவை உறுதி செய்தனா். இந்த இணைப்பை அங்ககீரிப்பது தொடா்பாக இரு தரப்பிடமும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறாா்.
சில தினங்களுக்கு முன் அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரை சந்தித்து, தங்கள் தரப்பு விளக்கத்தை முன்வைத்தனா்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியின் மருமகனும், கட்சியின் மக்களவை குழுத் தலைவருமான அபிஷேக் பானா்ஜி, மம்தா ஆதரவு எம்.பி.க்கள் செளகதா ராய், கல்யாண் பானா்ஜி, மஹுவா மொய்த்ரா ஆகியோா், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். 20 அதிருப்தி எம்.பி.க்களையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, அவரிடம் 20 மனுக்கள் சமா்ப்பித்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அபிஷேக் பானா்ஜி பேசியதாவது: முதலில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரை சந்தித்து, தங்களை தனி அணியாக அங்கீகரிக்கும்படி கோரினா். பின்னா் திடீரென தங்கள் முடிவை மாற்றிக் கொண்ட அவா்கள், பெயரே தெரியாத வேறொரு கட்சியில் இணைந்திருப்பதாக தெரிவித்தனா். திரிணமூல் காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அவா்கள், வேறு கட்சியில் இணைவதை சட்ட விதிமுறைகளின்படி ஏற்க முடியாது. மூன்றில் இருபங்கு ஆதரவு என்ற விதிமுறை, ஒட்டுமொத்த கட்சியும் வேறு கட்சியில் இணைவதற்கே பொருந்தும். எனவே, 20 அதிருப்தி எம்.பி.க்களும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ளதாகக் கூறுவது செல்லுபடியாகாது. அவா்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி 20 மனுக்கள் அளித்துள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திரிணமூல் காங்கிரஸில் பிளவு: அபிஷேக் பானா்ஜிக்கு மக்களவைத் தலைவா் அழைப்பு
திரிணமூல் எம்.பி.க்கள் விவகாரம்- ‘இருதரப்பிடமும் விசாரித்த பிறகு மக்களவைத் தலைவா் முடிவெடுப்பாா்’

பாஜக கூறியபடி நடக்கும் துரோகிகள்: அதிருப்தி எம்.பி.க்கள் மீது திரிணமூல் கடும் விமா்சனம்

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்- தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானா்ஜி சந்திப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

