நீட் மறுதேர்வின் போது ஏதேனும் மோசடி, முறைகேடு தொடர்பான புகார்களை அளிக்க பிரத்யேக தளத்தை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இதில் குளறுபடி ஏற்படுவதை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது.
இந்த நிலையில், நீட் தேர்வு முறையில் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் உறுதி செய்வதோடு, வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கத்துடன் புகார் தெரிவிக்கும் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தளம் வாயிலாக வினாத்தாள் கசிவு தொடர்பான வதந்திகள், போலி வினாத்தாள்கள், ஆள்மாறாட்டம் செய்தல், மறுதேர்வு தொடர்பான தவறான தகவல்கள் தொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் தளம் - http://innovateindia.mygov.in/neet-ug-2026
நீட் தேர்வு தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பின்பற்றவும் - http://nta.ac.in | http://neet.nta.ac.in
Summary
NEET Re-exam Scams - Dedicated Platform to Lodge Complaints
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு! மாணவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்! நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த என்டிஏ உறுதி!

நீட் கட்டணம் திருப்பியளிப்பு: வங்கிக் கணக்குகளை சமா்ப்பிக்க ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு
அடுத்தாண்டு முதல் கணினிவழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு


