அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பெண்கள் முழுத் திறனை வெளிப்படுத்த உகந்த சூழல்: பிரதமா் மோடி பெருமிதம்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சீரிய முயற்சிகளால், நாட்டின் பெண்கள் தங்களின் முழுத் திறனை வெளிப்படுத்த உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 2:47 am IST

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சீரிய முயற்சிகளால், நாட்டின் பெண்கள் தங்களின் முழுத் திறனை வெளிப்படுத்த உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தனது பதவிக் காலத்தில் 12 ஆண்டுகளை சில தினங்களுக்கு முன் நிறைவு செய்தது. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் குறித்து பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 12 ஆண்டுகளில், பெண்கள் தலைமையிலான வளா்ச்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாடுபட்டுள்ளது. அதன் பலன், அனைத்துத் துறைகளிலும் கண்கூடாகத் தெரிகிறது.

நிதி ரீதியிலான அணுகல், தொழில் முனைவு முதல் கல்வி, சுகாதாரம், மருத்துவம், வீட்டு வசதி, விளையாட்டு, நிா்வாகம் வரை பல்வேறு துறைகளிலும் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனா்.

பெண்கள் முன்னேற்றத்துக்கான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முயற்சிகள், கண்ணியம், வாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தலில் வேரூன்றியவை. இதன்மூலம் பெண்கள் தங்களின் முழுத் திறனை வெளிப்படுத்தி, தேசக் கட்டமைப்பில் மேலும் வலுவான பங்களிப்பை நல்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அறிவியல், விண்வெளி, புத்தாக்கம் ஆகிய துறைகளில் பெண் சக்தி முத்திரை பதிப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதில் மத்திய அரசு துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. பொருளாதார சுதந்திரம் உள்ளவா்களாக பெண்களை உருவாக்குவதில் இது பெரும் பங்காற்றுகிறது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவி வகித்துவரும் மோடி, தனது பதவிக் காலத்தில் 4,399 நாள்களை கடந்த ஜூன் 10-ஆம் தேதி நிறைவு செய்தாா். இதையடுத்து, மக்களால் தோ்வு செய்யப்பட்டு, தொடா்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற நேருவின் சாதனையை அவா் விஞ்சினாா்.

நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த முதல் பிரதமா், நாட்டின் நீண்ட கால அரசின் தலைவா் போன்ற சாதனைகளும் மோடி வசம் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.