வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்திய கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலை ஏற்க முடியாது! - டிரம்ப்பின் பதிவால் குழப்பம்!

இந்திய கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்...

News image

அதிபர் டொனால்ட் டிரம்ப். - ஏபி

Updated On :12 ஜூன் 2026, 9:02 pm IST

ஹோர்முஸ் நீரிணை அருகில் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரானிய படைகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இந்திய எண்ணெய்க் கப்பல்கள் மீது கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) அமெரிக்க படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை, அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல்தான் நடத்தியது என்பதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை அருகில் அமெரிக்க முற்றுகையை முறியடித்து இந்திய கப்பல்கள் ஈரானில் இருந்து எண்ணெய் கொண்டுச் செல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க கடற்படையினர் இந்தத் தாக்குதல் நடத்தியதை அங்கீகரித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்திய கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பல்வேறு தரப்பினருக்கும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுபற்றி, இன்று (ஜூன் 12) அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

“எங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கும் ஈரான் தரப்பிலிருந்து ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட போலிச் செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மேலும், ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேறிய இந்தியக் கப்பல்கள் மீது நேற்று இரவு அவர்கள் (ஈரான்) நடத்திய ட்ரோன் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் தங்களின் போக்கை உடனடியாக மாற்றிக்கொள்வது நல்லது” எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

Trump has accused Iranian forces of attacking Indian ships near the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.