"தமிழக மக்களின் நலன்களுக்காக ஒன்றுபட்டு பயணிப்போம், நல்லதை செய்வோம்' என்று தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜாவிடம் பேசியபோது முதல்வர் ஜோசப் விஜய் உறுதியளித்தார்.
தில்லியில் ஐடிஓ பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை வந்தார். அங்கு அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி. ராஜாவை முதல்வர் சந்தித்தார். அவரை பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கி வரவேற்ற டி.ராஜா, பிறகு முதல்வருடன் தனி அறையில் சந்திப்பை மேற்கொண்டார். சுமார் 20 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.
இது குறித்து "தினமணி'யிடம் டி.ராஜா கூறியதாவது: "மத நல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பேணி திறம்படவும் சிறப்பாகவும் ஆட்சி நடத்த வேண்டும். தமிழகத்தின் நலன்களைக் காக்க வேண்டும்' என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டேன்.
தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்த முதல்வர், நாம் ஒன்றுபட்டு பயணிப்போம். மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்வோம் என்று உறுதியளித்ததாக டி.ராஜா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரு மாத காலத்தை நிறைவு செய்த விஜய் அரசு!

ராகுல், சோனியாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடனான உறவை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: டி.ராஜா

மக்களின் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: எம்.ஏ.பேபி
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

