கர்நாடகத்தில் 40 வயதுடைய பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 10 பேரை காவல் துறையினர் இன்று (ஜூன் 9) கைது செய்தனர். இதில் 18 வயது நிரம்பாத சிறுவனும் அடக்கம்.
கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர்கள் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்திற்குட்பட்ட சன்னகிரி பகுதியில் இந்த வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. பசவபுட்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கணவருடனான பிரச்னை காரணமாக இரவில் பிறந்த வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த 14 வயதுடைய பெண்ணை, 10 பேர் கொண்ட இளைஞர்கள் அணுகி நன்றாகப் பேசி பழகியுள்ளனர். அவரின் அம்மா வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் குளிர்பானத்தில் மதுபானம் கலந்துகொடுத்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை விடியோ பதிவும் செய்த இளைஞர்கள், வெளியில் இது குறித்து கூறினால் இணையத்தில் விடியோவை பதிவிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
ஜூன் 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் இன்று முன்னிரவு 12.30 மாணிக்கு புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அதிகாலை 4.30 மணிக்குள் 10 பேரையும் கைது செய்தனர். காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
Summary
Karnataka Woman gang raped by 10 youths after being offered lift accused arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு! 3 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க பாஜக வலியுறுத்தல்
சிறுமி பாலியல் வன்கொடுமை புகாா்: 7 சிறுவா்கள் உள்பட 9 போ் கைது

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit
தினமணி செய்திச் சேவை

