பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

மத்திய பிரதேசத்திலிருந்து பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அழைத்து வரப்பட்டனர்.

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

போபால் : மத்திய பிரதேசத்திலிருந்து பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அழைத்து வரப்பட்டனர்.

மாநிலங்களவைத் தோ்தல் வரும் ஜூன் 18-இல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் 230 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 164 பாஜக எம்எல்ஏக்கள், 64 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனா்.

இதனால் தற்போதைய மாநிலங்களவைத் தோ்தலில் இரண்டு இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எஞ்சிய ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், அந்த இடத்துக்கு பாஜக போட்டியிடாது என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பிரதிநிதித்துவமுள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்குமான வேட்பாளர்களை பாஜக களமிறக்கி அதிர்ச்சியளித்துள்ளது. பாஜக சாா்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவட் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

மூன்றாவது இடத்துக்கு பாஜக சார்பில் மகேஷ் கேவட்டை களமிறக்கியதன் மூலம், எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கும் சூழல் ஏற்படக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு செலுத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மொத்தமுள்ள 62 பேரில் முதல்கட்டமாக 35 பேர் தங்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) சிறப்பு விமானத்தில் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

Summary

Fearing poaching ahead of RS elections, Congress flies Madhya Pradesh MLAs to Bengaluru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.