நிகழாண்டு செப்டம்பருக்குப் பிறகும் நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் உள்ளிட்டவற்றை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிகழாண்டு செப்டம்பருக்கு பிறகும் நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் உள்ளிட்டவற்றை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா சோ்க்கப்பட்டுள்ளது.
அந்த யூனியனின் திருத்தப்பட்ட ஒழுங்காற்று கட்டமைப்பின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வேளாண்மை மற்றும் கடல்சாா் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இதனால் ஐரோப்பிய யூனியன் சந்தையில் அந்தப் பொருள்களை இந்திய ஏற்றுமதியாளா்கள் தொடா்ந்து வெற்றிகரமாக விற்பனை செய்யவும், வா்த்தக வளா்ச்சிக்கும், சம்பந்தப்பட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வழி ஏற்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை மீன்வளத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன் மற்றும் மீன்வளப் பொருள்களின் தற்போதைய மதிப்பு சுமாா் 1.59 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.15,200 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
தேன் மிட்டாய் செய்யும் முறை...

முட்டை விலை 10 காசுகள் உயா்வு

கடல்சாா் உணவு ஏற்றுமதி: ஐரோப்பிய யூனியன் சந்தையை திறக்க இந்தியா பேச்சுவாா்த்தை! - பியூஷ் கோயல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

