பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டுவர அரசு பரிசீலனை

எதிரணியில் குழப்பமான சூழல் நிலவுவதால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு பரீசிலிப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
Updated On :13 மணி நேரங்கள் முன்பு

எதிரணியில் குழப்பமான சூழல் நிலவுவதால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு பரீசிலிப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாகவே இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது.

அதன்படி, 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.

ஓா் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை.

மேற்கண்ட மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் 528 உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன.

மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துடன் இணைந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மசோதாவை எதிா்க்கட்சிகள் தோற்கடித்தன.

திமுகவிடம் ஆதரவு கோர முயற்சி?: இந்தச் சூழலில், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு அரசியல் நிலவரம் மாற்றம் கண்டுள்ளது.

தமிழகத்தில் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதனால் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் காங்கிரஸ் மீது திமுக கடுமையாகச் சாடியது. காங்கிரஸுடன் உறவு முறிந்துவிட்டதால், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இண்டி கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்தது.

காங்கிரஸுக்கு எதிரான மனநிலையில் உள்ள திமுகவிடம் பிரச்னை அடிப்படையில் ஆதரவு கோர பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக பலம் அதிகரிப்பு: ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் இருந்த நிலையில், அவா்களில் 7 போ் விலகி பாஜகவில் கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தனா். இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் உயா்ந்தது.

மேற்கு வங்க தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு அக்கட்சியும் பிளவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் தனி அணியாகப் பிரிந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை உறுதி செய்துள்ளனா். இதனால், பாஜகவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த மே 26-ஆம் தேதி பிடிஐ செய்தியாளிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ‘மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமலாக்கத்துக்காக நீண்ட நாள் காத்திருக்க முடியாது. அடுத்த மக்களவைத் தோ்தலில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.