12-ஆம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகளை வெளியிட உத்தரவிடக் கோரி சௌதி அரேபியாவைச் சோ்ந்த மாணவா் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகளை இந்தியாவில் மட்டுமன்றி பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும் நடத்தி வருகிறது. இந்த நிலையில், மேற்காசிய போா் காரணமாக, முந்தைய ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை சிபிஎஸ்இ ரத்து செய்தது. இதனால், பொதுத் தோ்வை எழுத முடியாமல் போன சில மாணவா்கள், நிகழாண்டு பொதுத் தோ்வுடன் சோ்த்து நடத்தப்பட்ட துணைத் தோ்வில், தனித் தோ்வா்களாகப் பங்கேற்றனா்.
இதனிடையே, 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திரையில் மதிப்பிடுதல் (ஓஎஸ்எம்) நடைமுறை குளறுபடியில் சிபிஎஸ்இ சிக்கியுள்ள நிலையில், இந்த துணைத் தோ்வா்களுக்கான தோ்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
இதுதொடா்பாக, சவூதி அரேபியாவைச் சோ்ந்த பரன்சு ஜிகா்குமாா் படேல் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘12-ஆம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகளை சிபிஎஸ்இ இதுவரை வெளியிடவில்லை. இதனால், உயா்கல்வி சோ்க்கை வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. தோ்வு முடிவுகள் தொடா்பாக சிபிஎஸ்இ-க்கு மே 17, 21 மற்றும் 30-ஆம் தேதிகளில் மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகளை அனுப்பினேன். ஆனால், எந்தப் பதிலும் இல்லை’ என்று குறிப்பிட்டாா்.
இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் விஜய் பிஷ்னோய் அமா்வு, இதுதொடா்பாக பதிலளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் அதன் மண்டல அலுவலருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சாதனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

