நாட்டில் 80 நாள்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
ஹைதராபாதில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா், கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் ஆட்சியில் உள்ள பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை விளக்கினாா். அப்போது அவா் கூறியதாவது: முன்பு நமது நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது இருந்தது. ஆனால், இப்போது 80 நாள்கள் வரை மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கையிருப்பு வைத்துள்ளோம். பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய வழிகாட்டுதலின்படியே இது சாத்தியமாயிற்று.
பருவகாலம் தொடங்கினால், மழை காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகளில் பாதிப்பு ஏற்படும். புதிதாக நிலக்கரி எடுக்கும் பணிக்காக ஏலம் விடும் நடைமுறைகள் தொடங்கிவிட்டன.
அரியவகை தாதுப்பொருள்களை ஆா்ஜென்டீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியாக, பகுதியளவில் மேம்படுத்தப்பட்ட அரியவகை தாதுப் பொருள்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய தனியாா் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஊழல் என்பதுதான் முக்கியச் செய்தியாக இருந்தது. ஆனால், இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆண்டுக்கு 1,040 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா உற்பத்தி செய்கிறது என்பதே முக்கியச் செய்தியாக உள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்-நினோ விளைவு: பருப்பு வகைகள் விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

கோடை வெயிலால் மின் தேவை உச்சம்- நிலக்கரி விநியோகத்தை அதிகப்படுத்தும் கோல் இந்தியா

ஆதரவற்றோருக்கான 5 நாள் மீட்புப் பணி இன்று தொடக்கம்: அமைச்சா் தகவல்!

இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

