பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எல்பிஜி சிலிண்டர் விலையேற்றம் தவிர்க்க இயலாதது - மத்திய அரசு

சிலிண்டர் விலையேற்றம் பற்றி நாங்களும் மிகுந்த கவலையும் வருத்தமும் கொள்கிறோம் - மத்திய அரசு

News image

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு - Center-Center-Chennai

Updated On :7 ஜூன் 2026, 10:20 pm IST

எல்பிஜி சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயர்த்தப்பட்டது தவிர்க்க இயலாதது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

வீடுகளில் சமையல் பயன்பட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ஜூன் 7 முதல் ரூ. 29 மேலும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் வலுக்கிறது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக எல்பிஜி விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் பற்றி நாங்களும் மிகுந்த கவலையும் வருத்தமும் கொள்கிறோம். ஆனால், விமர்சனங்களைச் சுமத்துவதற்கு முன், ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த உலகிலும் உள்ள நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் மிகத் தீவிரமான பிரச்சினைகளில் சுழன்று கொண்டிருக்கிறது.

இவ்விவகாரத்தில் சரக்குப் போக்குவரத்து பரவலாக நடைபெறவில்லை. மிக மிகக் குறைவான உற்பத்தி தரப்புகளிடமிருந்தே எல்பிஜி கிடைக்கிறது. இவற்றுக்கான போக்குவரத்துச் செலவும் அதிகம். அடிப்படை விலையும் உயர்ந்துள்ளது. இன்சூரன்ஸ் செலவும் அதிகரித்துள்ளது.

ஆகவே, நாங்களும் சாமானிய மனிதரைப் பற்றி சம அளவுக்கு வருத்தமடைந்திருக்கிறோம். ஆனால், அதேவேளையில், விலையேற்றம் தவிர்க்க இயலாதது” என்றார்.

Summary

LPG price hike inevitable due to global crisis: Union Minister Pralhad Joshi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.