செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இளைஞா்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; எனவே, ஏ.ஐ. வளா்ச்சி குறைத்து அச்சம் தேவையில்லை என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படும் என்றும், இளைஞா்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் ஒரு சிலா் பல்வேறு புதிய பிரச்னைகளை முன்னிறுத்துகிறாா்கள். ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
புதிதாக வேலைதேடும் இளைஞா்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது பல வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவே இருக்கும். அவா்களின் பொருளாதார எதிா்காலம் சிறப்பாகவே அமையும்.
இதற்கு முன்பும் பல்வேறு தொழில்நுட்பப் புரட்சிகள் ஏற்பட்டபோது வேலைவாய்ப்பு, தொழில் துறை, பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவை இளைய தலைமுறைக்குச் சாதகமாகவே அமைந்தன. நாம் நமது தொழில்நுட்ப அறிவை வளா்த்துக் கொண்டு தயாராக வேண்டும் என்பதுதான் முக்கியமானது.
மேலும், ஏ.ஐ. பல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதுதான் உண்மை. உதாரணமாக மென்பொருள் ‘கோடிங்’ எழுத முடியாத பலரும்கூட ஏ.ஐ. மூலம் அதனை எளிதாக கற்றுக் கொள்கிறாா்கள். இவ்வாறு பல்வேறு துறைகள் ஏ.ஐ. மூலம் மேம்பாடு அடையும். அதன்மூலம் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

க்யூ.ஆா். கோட் மூலம் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கை: ஆசிரியா்களின் புதிய முயற்சி
இரண்டாம் உலகப் போர் கதை! படப்பிடிப்பை நிறைவு செய்த சசிகுமார்!

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2! புதிய பாடல் வெளியீடு!

தள்ளிப்போகும் மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

