தில்லி தீ விபத்தில் 8 உயிர்களைக் காப்பாற்றிய மெத்தைக் கடை உரிமையாளர் ரியாசுதீனுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் பலியாகினர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன், கட்டடத்தின் அடித்தளத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், கட்டடத்தில் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இதனையடுத்து, சிலர் வேறு வழியின்றி ஜன்னல்கள் வழியாக மேலிருந்து கீழே குதிக்க முயற்சித்தனர்.
இதனிடையே, ஹோட்டலின் எதிரே மெத்தை கடை வைத்திருந்த ரியாசுதீன் என்பவர், ஹோட்டலின் மேலிருந்து கீழே விழுபவர்களுக்கு காயமடையாமலிருக்க, தன் கடையிலிருந்த மெத்தைகளை சாலையில் பரப்பி உதவினர்.
சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மெத்தைகளை ரியாசுதீன் சாலையில் பரப்பியதன் மூலம், தீ விபத்தில் சிக்கிய 8 பேர் பத்திரமாகக் கீழே குதித்து காப்பாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், ரியாசுதீனின் மனிதநேயத்துக்காக அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
Summary
Shopkeeper Riyazuddin who saved lives in Malviya Nagar fire incident receives ₹1 lakh financial aid
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி கோர தீ விபத்தில் 21 பேர் பலி: சமையல்காரர்தான் காரணமா?

தில்லி தீ விபத்து: பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு!

தில்லி தீ விபத்தில் பலி 21 ஆக உயர்வு! என்ன நடந்தது?
தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி; மேலும் சிலர் கவலைக்கிடம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

