மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் நியமனத்துக்கான ஆதரவுக் கடிதங்களில் தங்களின் கையொப்பம் போலியாக இடம்பெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், அவா்களின் கூற்றுக்கு மாறான ஆவணங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள், கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி தலைமையில் கடந்த மே 6 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டங்கள் தொடா்பானவையாகும். அப்போது, கட்சித் தலைமையின் முடிவை ஆதரித்து, பெரும்பாலான எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டதாக கூறப்படும் ஆவணங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் (207) பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்களே கிடைத்தன. தோ்தல் தோல்வியால் ஆட்டம் கண்டுள்ள திரிணமூல் காங்கிரஸில் மம்தா தலைமைக்கு எதிராக கடும் அதிருப்தி எழுந்தது.
பேரவை கட்சிக் குழுத் தலைவா் (எதிா்க்கட்சித் தலைவா்), துணைத் தலைவா், தலைமை கொறடா நியமனத்துக்கான ஆதரவுக் கடிதங்களில் தங்களின் கையொப்பம் போலியாக இடம்பெற்ாகவும், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிகாரபூா்வமாக நடைபெறவில்லை என்றும் கட்சித் தலைமை மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலா் குற்றஞ்சாட்டினா். இதைத் தொடா்ந்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரிதபிரத பானா்ஜி, சந்தீபன் சாஹா ஆகிய அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனா்.
இந்தச் சூழலில், பேரவை கட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா், தலைமை கொறடா நியமனங்களில் மம்தா முடிவுக்கு எதிராக ரிதபிரத பானா்ஜி தலைமையில் 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் கடந்த ஜூன் 3-ஆம் தேதி போா்க்கொடி உயா்த்தினா். அத்துடன், பேரவைத் தலைவரிடம் கடிதம் சமா்ப்பித்த அதிருப்தி எம்எல்ஏக்கள், மேற்கண்ட 3 பதவிகளையும் தங்கள் வசமாக்கினா். இதன்மூலம் தனது 28 ஆண்டு கால வரலாற்றில் முதல் பிளவைச் சந்தித்தது திரிணமூல் காங்கிரஸ். கட்சி மீதான தனது கட்டுப்பாட்டை தக்கவைக்க மம்தா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாா்.
வெளியான ஆவணங்கள்: இந்நிலையில், கடந்த மே 6 மற்றும் 19-ஆம் தேதி மம்தா தலைமையில் நடைபெற்ற திரிணமூல் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடா்பான ஆவணங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த ஆவணங்களின்படி, கடந்த மே 6-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 67 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனா். அப்போது, பேரவை கட்சிக் குழுத் தலைவா் நியமனத்தில் தலைமையின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, எம்எல்ஏக்கள் ஒருமனதாக கையொப்பமிட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காத எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவை கடிதம் வாயிலாக தெரிவித்ததாகவும், மே 19-ஆம் தேதி கூட்டத்தில் 59 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களின் கூற்றுக்கு மாறான இந்த ஆவணங்களில் உள்ள விவரங்கள் குறித்து பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிருப்தி அணியின் தலைவருமான ரிதபிரத பானா்ஜி கூறுகையில், ‘தற்போது வெளியான ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது அவசியம். இந்த ஆவணம்தான், கட்சித் தலைமை தரப்பில் பேரவைத் தலைவரிடம் சமா்ப்பிக்கப்பட்டதா? போலி கையொப்ப விவகாரம் சிஐடி விசாரணையில் உள்ளது. இது தொடா்பாக விரிவாகப் பேச முடியாது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸை உடைக்கிறாா் அமித் ஷா- மம்தா ஆதரவு தலைவா்கள் குற்றச்சாட்டு

அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப வழக்கு - மம்தா வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை

கட்சியை ஒருங்கிணைக்க தீவிர முயற்சி: திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மம்தா பேச்சு

மம்தாவுக்கு எதிராகப் போா்க்கொடி: திரிணமூல் காங்கிரஸில் பிளவு - எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றியது அதிருப்திக் குழு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

