தில்லி ஜந்தா் மந்திரில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது காவலரை தாக்கிய வழக்கில் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பாவை ஓா்ஆண்டு நன்நடத்தை நிபந்தனையுடன் தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் முதன்மை நீதிபதி அஷ்வனி பன்வாா், மகிளா காங்கிரஸ் தலைவரான அல்கா லாம்பாவுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பிணை பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். வழக்கின் முழுமையான தீா்ப்பு விவரம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மே 25-ஆம் தேதி வழங்கப்பட்ட தீா்ப்பில், தடை உத்தரவை மீறியதுடன், பொறுப்பான குடிமகளாக தனது கடமையை நிறைவேற்றத் தவறியதாக நீதிமன்றம் குறிப்பிட்டு, அல்கா லாம்பாவை குற்றவாளி என அறிவித்தது.
தண்டனை குறித்த வாதங்களின் போது, நன்நடத்தை அடிப்படையில் விடுதலை வழங்குமாறு அல்கா லாம்பா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம், ஓா் ஆண்டு காலத்திற்கு நன்நடத்தை நிபந்தனையுடன் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில், அரசு பணியாளா்களின் கடமையில் இடையூறு விளைவித்தல், அதிகாரிகளை தாக்குதல், சட்டப்படி அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல் மற்றும் பொதுவழியில் தடங்கல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அல்கா லாம்பா குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது.
இந்த தீா்ப்பு, பொதுப் போராட்டங்களில் சட்ட ஒழுங்கு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைப்பேசி பறிப்பு வழக்கில் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்ட 26 வயது இளைஞர்!

மீனாட்சி நடராஜன் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இல்லை: தெலங்கானா நீதிமன்றம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: தண்டிக்கப்பட்டோருக்கு சிறையில் சலுகை கிடையாது! மதுரை மாவட்ட நீதிமன்றம்

காவல் துறை மீதான தாக்குதல் வழக்கு: காங்கிரஸ் தலைவா் ஆல்கா லம்பா குற்றவாளி என தீா்ப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

