பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

அவரது மாமியார் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கிரிபாலாவை நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவு...

News image

ய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கிரிபாலா - IANS

Updated On :2 ஜூன் 2026, 10:10 pm IST

திவிஷா சர்மா உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் குடும்பத்தினர் மீது சந்தேகமிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மாமியாரையும் அவரது கணவரையும் நீதிமன்றக் காவலில் விசாரிக்க மத்திய பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நடிகையும் மாடல் அழகியுமான திவிஷா சா்மா (33) கடந்த மே 12-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரிடம் வரதட்சிணை கேட்டு சமா்த் சிங்கும், கிரிபாலா சிங்கும் கொடுமை செய்ததால் திவிஷா சா்மா தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோா் குற்றஞ்சாட்டினா். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கிரிபாலா சிங், மனநலப் பிரச்னையால் ட்விஷா சா்மா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினாா். இந்தச் சம்பவம் தொடா்பாக சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, ட்விஷாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டது.

திவிஷா சா்மா வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் உயிரிழந்த வழக்கில், அவரது மாமியாரும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்குக்கு போபால் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அவரை அவரது இல்லத்தில் சிபிஐ கைது செய்தது.

இந்த நிலையில், சிபிஐ ரிமாண்ட் முடிவுற்ற நிலையில், கிரிபாலா சிங், கணவர் சமர்த் சிங் ஆகியோர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Summary

 Twisha Sharma’s husband Samarth Singh, and mother-in-law, retired judge Giribala Singh, to 14 days of judicial custody after their remand with the Central Bureau of Investigation (CBI) ended. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.