பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்!

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தது பற்றி...

News image

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - படம் - ஏஎன்ஐ

Updated On :2 ஜூன் 2026, 8:10 pm IST

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வி.டி. சதீசன் பேசியதாவது:

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை போதைப்பொருள் பரவல். போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் காணப்படும் மாநிலங்களில் ஒன்றாக கேரளம் மாறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

மக்கள்தொகையில் சுமார் 60 முதல் 65 சதவிகிதம் இளைஞர்கள். கேரளத்தில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. மாநிலத்தில் குற்றங்களின் தன்மை மாறி இருக்கிறது. கொடூரமான முறையில் குற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பயன்பாடுதான்.

சிறுவர்கள் தங்கள் சொந்தப் பெற்றோரையே கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். கேரள மண்ணிலிருந்து போதைப்பொருள் அமைப்பை நாங்கள் முற்றிலுமாக விரட்டியடிப்போம்.

காவல் துறை போதைப்பொருள்களுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, காவல் துறைக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று தெரிவித்தார்.

Summary

Kerala's Chief Minister V.D. Satheesan stated on Tuesday that the spread of drugs is the biggest challenge facing the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.