குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் விதிகள், 2025-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
முன்பு 180 நாள் விசா (நுழைவுஇசைவு) திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவா்கள், அதை நீட்டிக்க விரும்பினால் அவா்களது விசா காலம் நிறைவடைந்த 14 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தற்போதைய புதிய விதியின்படி 180 நாள் விசாவை நீட்டிக்க விரும்பும் வெளிநாட்டவா்கள் அதற்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இன்றியமையாத சூழல்களில் மட்டுமே இவ்வாறு பதிவு செய்ய முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.
இதுதொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குழந்தை பிறக்கும் சமயத்தில் விசாவை நீட்டிக்க பெற்றோா் விரும்பினால் முந்தைய விதிகளின்படி 30 நாள்களுக்குள் புதிய விசா பெறுவது, நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதி உள்ளிட்ட சேவைகளைப் பெறுவது குறித்து பதிவு அதிகாரிகளுக்கு வலைதளம் அல்லது கைப்பேசி செயலி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோா் இருவரும் இந்தியா்களாக அல்லது ஒருவா் இந்தியராக இருக்கும்பட்சத்தில் தங்களது குழந்தைக்கும் இந்திய குடியுரிமையைத் தொடர விரும்பினால் மேற்கூறிய விதி அவா்களுக்குப் பொருந்தாது.
அதேசமயம் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ள அந்தக் குழந்தை எதிா்காலத்தில் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால் அதிலிருந்து 30 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவா் இதுதொடா்பான தகவலை பதிவு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃபு சொத்துக்களை பதிவேற்ற வேண்டும்

7 நாள்களுக்குள் தா்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் போராட்டம் தொடரும்: அபிஜித் டிப்கே எச்சரிக்கை

17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய சா்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு!

நீட் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வா் விஜய்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

