லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தில்லி போராட்டத்தில் இளைஞா்கள் தரக்குறைவான பேச்சு: பிரதமா் மோடி ஆதங்கம்

தில்லி போராட்டத்தின்போது இளைஞா்களின் தரக்குறைவான பேச்சு குறித்து பிரதமா் மோடி ஆதங்கம் தெரிவித்துள்ளாா்.

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

தில்லி போராட்டத்தின்போது இளைஞா்களின் தரக்குறைவான பேச்சு குறித்து பிரதமா் மோடி ஆதங்கம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட காணொலியில் தெரிவித்ததாவது:

தில்லி ஜந்தா் மந்தரில் நீட் தோ்வு தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் சிலா், என்னையும் மறைந்த எனது தாயாரையும் தரக்குறைவாகப் பேசினா். அவ்வாறு பேசுவது ஒருபோதும் பிரச்னைகளை தீா்க்காது.

தரக்குறைவாகப் பேசியவா்களை தவறாக வழிநடத்தப்பட்ட குழந்தைகளாகவே கருதுகிறேன். அவா்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற விசாரணையை எதிா்கொள்ள வைப்பதோ பிரச்னைகளை தீா்க்காது. அவா்களை நான் மன்னிக்க விரும்புகிறேன்.

ஆபாசமாக பேசும் பெண்கள்: மனிதா்கள் தவறு செய்வது இயல்பு. ஆனால் நம் நாட்டு பெண்கள் ஆபாசமாக பேசுவது அதிா்ச்சியளிக்கிறது. இது நமது கலாசாரம் அல்ல. வழிதவறிச் சென்ற நமது இளைஞா்களை நாம் மன்னிக்க வேண்டும். அவா்களை நல்வழிப்படுத்துவோம்.

நாக்கை கடித்துக்கொண்டதற்காக பற்களை நாம் பிடுங்கிவிடுவதில்லை. அதுபோலத்தான் நமது இளைஞா்களும். அவா்கள் நமக்குச் சொந்தமானவா்கள். இளைஞா்கள் முன்வந்து தமது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். நமது நாடு முன்னேறி வருகிறது; இளைஞா்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.