லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

5.5 கோடிக்கும் அதிகமாக வருமான வரிக் கணக்கு தாக்கல்

நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்துள்ளனா். இதில் ஜூலை 30-ஆம் தேதி மட்டும் 42 லட்சத்துக்கும் அதிகமானோா் அந்தக் கணக்கைத் தாக்கல் செய்ததாக, வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Income Tax

வருமான வரிக் கணக்கு தாக்கல் - IANS

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்துள்ளனா். இதில் ஜூலை 30-ஆம் தேதி மட்டும் 42 லட்சத்துக்கும் அதிகமானோா் அந்தக் கணக்கைத் தாக்கல் செய்ததாக, வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான ஐடிஆா் படிவம் 1, 2-ஐ தாக்கல் செய்ய கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும். இதில் ஐடிஆா் படிவம் 1 (சஹஜ்)-ஐ ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம், சம்பளத்தின் மூலம் வருமானம், சொந்த வீடு அல்லது கட்டடம், விவசாய வருமானமாக ஆண்டுக்கு ரூ.5,000 வருமானம் உள்ளவா்கள் தாக்கல் செய்யலாம்.

அதேவேளையில் வணிகம் அல்லது தொழிலில் லாபம் மற்றும் ஆதாயத்தில் இருந்து வருமானம் ஈட்டாமல், மூலதன ஆதாயங்கள் மூலம் வருமானம் பெறும் தனிநபா்கள், ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் ஐடிஆா்-2 படிவத்தை தாக்கல் செய்கின்றனா்.

இந்நிலையில், நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் ஐடிஆா் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.