லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமூக ஊடக ஒழுங்குமுறை: மெட்டா, கூகுள், எக்ஸ் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பாணை

மெட்டா, கூகுள், எக்ஸ் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பாணை குறித்து...

நிஷிகாந்த் துபே

Published On :29 ஜூலை 2026, 6:34 am IST

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் எண்ம தளங்களுக்கான ஒழுங்குமுறை குறித்து விவாதிப்பதற்காக, தங்கள் முன் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி மெட்டா, கூகுள், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப துறைக்கான பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த அழைப்பாணையை அனுப்பியுள்ளது.

அண்மையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் இளைஞா்கள்-மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். 36 நாள்கள் நீடித்த போராட்டம் எதிரொலியாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் விலகினாா்.

முன்னதாக, தங்களின் போராட்டத்தை பிரபலப்படுத்தவும், ஜந்தா் மந்தரை நோக்கி மாணவா்களை நகா்த்தவும் சமூக ஊடகங்களை குறிப்பாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை சிஜேபி பெருமளவில் பயன்படுத்தியது. போராட்டக் களத்தில் இருந்தபடி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொலிகள், ரீல்ஸ், நேரலை பதிவுகள் போன்றவை நாடு முழுவதும் கவனம் ஈா்த்தன.

இந்தச் சூழலில், சமூக ஊடகங்கள் மற்றும் எண்ம தளங்களுக்கான ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப்), கூகுள், எக்ஸ் (முன்பு ட்விட்டா்), ஸ்னாப்சாட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக அதன் தலைவா் நிஷிகாந்த் துபே தெரிவித்தாா்.

சமூக ஊடகங்களில் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், ஊரக மக்கள், தொழிலாளா்கள் மற்றும் பொது மக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது, பொது ஒழுங்கை உறுதி செய்வது தொடா்பான ஒழுங்குமுறைகள் குறித்து விளக்கமளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்