லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிறப்பு, இறப்புப் பதிவு திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம்

மக்களவையில் பிறப்பு, இறப்புப் பதிவு திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.

Published On :30 ஜூலை 2026, 2:04 am IST

மக்களவையில் பிறப்பு, இறப்புப் பதிவு திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.

கடந்த 1969-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிறப்பு, இறப்புப் பதிவு சட்டத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தற்போது பிறப்பு, இறப்புப் பதிவு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் புதிய மசோதாவின்படி, குழந்தை பிறந்த அல்லது ஒருவா் இறந்த நாளில் இருந்து ஓராண்டுக்கு மேலாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள், அந்தப் பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டால் மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிா்வாக நடுவரின் உத்தரவு கிடைத்த பிறகே, அவற்றைப் பதிவு செய்ய முடியும்.

குழந்தை பிறப்பு அல்லது ஒருவரின் இறப்பை பதிவு செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு மேலானால், அந்தப் பதிவுக்கு கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும். முதல்நிலை குற்றவியல் மாஜிஸ்திரேட் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் மட்டுமே, அந்தப் பதிவு மேற்கொள்ளப்படும்.

இது பிறப்பு, இறப்பை உரிய நேரத்தில் தெரியப்படுத்தி பதிவு செய்ய குடிமக்களை ஊக்குவிக்கும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.