லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவப்பு எச்சரிக்கை! வெள்ளத்தில் மிதக்கும் தலைநகர் தில்லி

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வெள்ளத்தில் மிதக்கிறது தலைநகர் தில்லி

புது தில்லி

புது தில்லி - pti

Published On :28 ஜூலை 2026, 3:32 pm IST

செவ்வாய்க்கிழமை காலை விடியும்போது தலைநகர் தில்லியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. ஒருபக்கம் கடுமையான வெப்பம் குறைந்தாலும், மறுபக்கம் சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தில்லிக்கு, இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும், ஓரிரு இடங்களில் மாலை 3 மணி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இந்த நிலையில், தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் மழையால் வெள்ளம் சூழப்பட்டுள்ளது. ஷங்கர் விஹார் பகுதி, பாண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

ஏரளமான பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

புதன்கிழமையும் தில்லியில் மழை பெய்யும் என்றும் பல இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஒரு சில நாள்களுக்கு தொடர்ந்து தலைநகர் புது தில்லியில் மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.