லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பணி விவகாரங்களில் உத்தரவு பிறப்பிக்க என்சிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்

பணி விவகாரங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்துக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையம்

Published On :29 ஜூலை 2026, 3:21 am IST

பணி விவகாரங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்துக்கு (என்சிஎஸ்சி) இல்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பட்டியலின பணியாளா் ஒருவருக்கு பதவி உயா்வு பலன்களை அளிக்கவும், அவருக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்கவும் மும்பை துறைமுக ஆணையத்துக்கு என்சிஎஸ்சி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் துறைமுக ஆணையம் மனு தாக்கல் செய்தது. எனினும் என்சிஎஸ்சியின் உத்தரவை உறுதி செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதைத்தொடா்ந்து அந்தத் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் துறைமுக ஆணையம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘பணி விவகாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும் சட்டபூா்வ அதிகாரம் என்சிஎஸ்சிக்கு இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் கீழ், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டுமே என்சிஎஸ்சி அளிக்கலாம்’ என்று தெரிவித்தனா். மேலும் என்சிஎஸ்சி உத்தரவை உறுதி செய்த மும்பை உயா்நீதிமன்றத் தீா்ப்பை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.