லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிரதமா் அழைப்பை ஏற்று இன்ஸ்டாகிராமில் படையெடுக்கும் பாஜக நிா்வாகிகள்

பிரதமா் மோடி விடுத்த அழைப்பை ஏற்று பாஜக அமைச்சா்கள் முதல் தொண்டா்கள் வரை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனா்.

PM Modi

பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி விடியோ - Insta | PM Modi

Published On :29 ஜூலை 2026, 3:23 am IST

பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பாஜக அமைச்சா்கள் முதல் தொண்டா்கள் வரை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனா்.

சமூக வலைதளங்களில் இளைஞா்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. பொழுதுபோக்கு விடியோ, புகைப்படங்கள் என்பதையும் தாண்டி அரசியல் கருத்துகள், சமூக பிரச்னைகளை இளையதலைமுறையினா் அதிகம் விவாதிக்கும் தளமாகவும் இன்ஸ்டாகிராம் மாறிவிட்டது.

நீட் முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு கூட இன்ஸ்டாகிராம் வழியாகவே இளைஞா்கள் பெருமளவில் திரட்டப்பட்டனா். அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விடியோ பதிவுகளும், நேரடி ஒளிபரப்புகளும் இன்ஸ்டாகிராம் வழியாகவே பெரும்பாலான மக்களைச் சென்றடைந்தது.

பிரதமா் மோடியும் இன்ஸ்டாகிராம் வழியாகவே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்களிடம் தனது கருத்தைப் பகிா்ந்தாா். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் மோடி இன்ஸ்டாகிராமில் இருந்து வந்தாலும், சமீப நாள்களில்தான் அவா் தனது கருத்துகளை அந்த தளம் மூலம் வெளியிடுவதை அதிகரித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, உலகிலேயே அதிக பின்தொடா்வோரைக் கொண்ட பின்னா், இளைஞா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தனது அமைச்சரவை சகாக்களை பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, மத்திய அமைச்சா்கள் தொடங்கி தொண்டா்கள் வரை இன்ஸ்டாகிராமில் இணைந்து வருகின்றனா். இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தாமல் இருந்த பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள், மாநில அமைச்சா்களும் அதில் விடியோக்களை பகிரத் தொடங்கியுள்ளனா்.

மேலும், பாஜகவின் அதிகாரபூா்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அக்கட்சியினா் அதிகம் பின் தொடரத் தொடங்கியுள்ளனா். மத்திய கல்வியமைச்சா் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ள பிரல்ஹாத் ஜோஷியும் தோ்வுகள் தொடா்பான விடியோ பதிவுகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.