லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாணவர்கள் மீதான தாக்குதல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

காவல்துறையின் அத்துமீறல்களை நியாயப்படுத்தமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

CJP Protest

சிஜேபி போராட்டம் - படம்: PTI

Published On :27 ஜூலை 2026, 1:30 pm IST

காவல்துறையின் அத்துமீறல்களை நியாயப்படுத்தமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் பிற தேர்வு முறைகேடுகள் தொடர்பாகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மனுக்களை இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டிருந்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்தில் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவையும், மற்ற பட்டியலிடப்பட்ட மனுக்களுடன் சேர்த்து நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் பேசுகையில், ”அமைதியான முறையில் போராடும் உரிமை முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை மறுக்க முடியாது. அதேபோல, போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக மட்டுமே காவல்துறையின் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது.

இதற்கு ஒரு நடைமுறை இருக்கவேண்டும். முறையாக இடம் ஒதுக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது. ஆனால், சமூக விரோத சக்திகள் இருந்தால் அதனைக் கையாளலாம். இது தில்லி பற்றியப் பிரச்னை மட்டுமல்ல. ஒழுங்கான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

காவல்துறையினர் தாக்கப்பட்டதாக வழக்கறிஞர் கூறியபோது, “யாராக இருந்தாலும் ஒவ்வொருவரின் உயிரும் முக்கியமானது” என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், மோதல் போக்கின்றி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்றும் மனுதாரர்களை நீதிபதி வலியுறுத்தினார்.

நீதிமன்றத்திற்கு பாரபட்சமற்ற முறையில் உதவுவதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அமர்வு ஒப்புக்கொண்டது.

The Supreme Court has stated that police excesses cannot be justified.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.