லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபி

கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் இறங்க நேரிடும் என சிஜேபி தெரிவித்துள்ளது பற்றி...

CJP-govt talk underway

கோப்புப்படம்

Published On :27 ஜூலை 2026, 7:24 pm IST

கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் இறங்க நேரிடும் என சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை பதவி விலகினார். ஆகையால், போராட்டமும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதாக குற்றம் சாட்டிய சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது தொடர்பான கோரிக்கை முழுமையாக மீறப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். பிகார் மற்றும் வங்காளத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் கண்காணிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு உதவிகள் செய்துவந்த தன்னார்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக தில்லியில் பல அறிக்கைகள் வெளிவருகின்றன.

போராட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாணவர்களை விடுவிக்க வேண்டும். மேலும் எங்கள் கோரிக்கைகளின்படி தில்லி காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாஜக கூட்டணி மாநிலங்களின் காவல்துறையினரால் எதிர்காலத்தில் எந்த முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படக்கூடாது. இவ்வாறு செய்யத் தவறினால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.

இதுதொடர்பாக நாளை (ஜூலை 28) எங்களுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று சௌரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.