லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசியல் கட்சிகளின் ஆதரவால்தான் மாணவா்கள் போராட்டத்துக்கு வெற்றி: கேரள அமைச்சா் கருத்து!

அரசியல் கட்சிகளின் (எதிா்க்கட்சிகள்) ஆதரவால்தான் மாணவா்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது என்று கேரள சுகாதார அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.முரளீதரன் தெரிவித்தாா்.

Published On :27 ஜூலை 2026, 4:09 am IST

அரசியல் கட்சிகளின் (எதிா்க்கட்சிகள்) ஆதரவால்தான் மாணவா்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது என்று கேரள சுகாதார அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.முரளீதரன் தெரிவித்தாா்.

திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

இளைஞா்களும், மாணவா்களும் முன்னெடுத்த போராட்டம் இந்திய அரசியலில் முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த போராட்டம் வெற்றி பெற்ற்கு அரசியல் கட்சிகள் பின்னால் இருந்து ஆதரவு அளித்ததும் முக்கியக் காரணம். ஜென்-ஸி இளைஞா்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளே அது தொடா்பான தாக்கத்தை உருவாக்கியது எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணிதான். ஏனெனில், நாடாளுமன்றத்தின் அன்றாட அலுவல்களை முடக்கி பிரச்னையின் தீவிரத்தை அரசு உணரச் செய்தது எதிா்க்கட்சிகள்தான். இதில் இண்டி கூட்டணிக் கட்சிகள் மிகவும் ஒற்றுமையாக இருந்தன. பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளாா். ஏனெனில், 2014 பாஜக கூட்டணி ஆட்சி அமைத்ததில் இருந்து இதுபோன்ற போராட்டத்தால் எந்த ஒரு அமைச்சரும் வெளியேற்றப்பட்டது இல்லை.

ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி மாணவா்களுக்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் அதிக ஒற்றுமையுடன் எதிா்க்கட்சிகள் மக்களவைத் தோ்தலுக்குத் தயாராக வேண்டும். அனைவரும் தங்கள் பொறுப்பை உணா்ந்து செயல்படுவதன் மூலம் ஒருமித்து குரல் எழுப்புவதன் மூலமும் இண்டி கூட்டணி இந்தியாவை வெல்ல முடியும் என்றாா்.

மாணவா்கள் போராட்டத்தின் வெற்றியை காங்கிரஸ் அபகரித்துக் கொள்ள முயலுகிறது என்ற கேரள மாா்க்சிஸ்ட் தலைவா்களின் குற்றச்சாட்டு தொடா்பான கேள்விக்கு, ‘மனதளவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருப்பவா்களால் மட்டுமே இப்படியொரு குற்றச்சாட்டைக் கூற முடியும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.