லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்பு

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மத்திய கல்வி அமைச்சராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றதைத் தொடா்ந்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரல்ஹாத் ஜோஷி.

Published On :27 ஜூலை 2026, 4:12 am IST

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புது தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தின் எதிரொலியாக கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதனைத் தொடா்ந்து, இணை அமைச்சா் ஜெயந்த் சௌதரியுடன் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.