லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பற்றி...

Delhi Metro stations reopen.

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு. - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 7:33 pm IST

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நீட் தேட்வில் நிகழ்ந்த குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு முன்னெடுப்பாக கடந்த திங்கள்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு அருகில் உள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி வீடு, மத்திய செயலகம், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தம், கான் சந்தை, ஜோர் பாக், சிவாஜி அரங்கம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்களை மறுஉத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மூடப்பட்ட அனைத்து மெட்ரோ நிலையங்களும் பயணிகளின் சேவைக்காக மீண்டும் திறக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிஜேபியினரின் போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.