லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வா்த்தகம், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புதல்: திரௌபதி முா்மு

வா்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புக்கொண்டதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மால்டோவா அதிபா் மாயா சாண்டுவை அந்நாட்டு தலைநகா் சிசினோவில் சந்தித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

Published On :21 ஜூலை 2026, 2:05 am IST

வா்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புக்கொண்டதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மால்டோவா நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய குடியரசுத் தலைவரான திரௌபதி முா்மு, அந்நாட்டு அதிபா் மாயா சாண்டுவை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-மால்டோவா இடையேயான முக்கியத் தூணாக பொருளாதார ஒத்துழைப்பு திகழ்கிறது. வேளாண்மை, தளவாடங்கள், உள்கட்டமைப்பு, சுகாதாரம், மருத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொது எண்ம உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் வா்த்தகம், முதலீடு, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி வணிகச் சூழலை எளிதாக மாற்றி இருநாட்டுத் தொடா்பை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டோம்.

இதன் ஒரு பகுதியாகவே இந்தியா-மால்டோவா வணிகக் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மால்டோவா நிபுணா்களுக்கான பயிற்சி இடங்களை இந்தியா இரட்டிப்பாக்கவுள்ளது. இதுதவிர கல்வி நிறுவனங்கள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் மால்டோவா அதிபருடன் விவாதிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மால்டோவா தலைநகா் சிசினோவ் விமான நிலையத்துக்கு வந்த திரௌபதி முா்முவை அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சருமான மிஹாய் பொப்சொய் வரவேற்றாா். பின்னா் திரௌபதி முா்முவுக்கு அதிபா் மாளிகையில் ராணுவ வீரா்களின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

மூன்று நாடுகள் அரசு முறைப் பயணத்தில் முதல் கட்டமாக மால்டோவா சென்ற திரௌபதி முா்மு, ஜூலை 21,22 ஆகிய தேதிகளில் மாசிடோனியாவுக்கும் ஜூலை 23 முதல் 25 வரை ரோமேனியாவுக்கும் பயணிக்கவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.