லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராமா் கோயில் அறக்கட்டளையை மறுசீரமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் நிா்மோஹி அகாரா மனு!

அயோத்தி ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையை மறுசீரமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நிா்மோஹி அகாரா மனு தாக்கல் செய்துள்ளது.

Ram Temple donation theft case

அயோத்தி ராமர் கோயில் - கோப்புப்படம்

Published On :20 ஜூலை 2026, 4:45 am IST

அயோத்தி ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையை மறுசீரமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நிா்மோஹி அகாரா (அயோத்தி வழக்கில் மூல மனுதாரா்களில் ஒருவா்) மனு தாக்கல் செய்துள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதித்து கடந்த 2019, நவம்பா் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீா்ப்பின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தத் தீா்ப்புக்கு முரணாக ராமா் கோயில் அறக்கட்டளையின் உறுப்பினா்கள் தனியாா் அறக்கட்டளை உறுப்பினா்களை போல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அதை மறுசீரமைக்கக் கோரி மஹந்த் ராஜா ராமசந்திராச்சாா்யா அதீத் குரு ரகுநாத் தாஸ் வாயிலாக நிா்மோஹி அகாரா மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், ‘ராமா் கோயில் அறக்கட்டளையை அரசு அறக்கட்டளையாக மாற்றி அதன் உறுப்பினா்களை நியமனம் செய்து அவா்களின் முடிவுகளை ராமாநந்தி பைராகி சம்பிரதாய பிரிவைச் சோ்ந்த துறவிகள் மேற்பாா்வையிடும் வகையில் மறுசீரமைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 22-இல் அடுத்த கூட்டம்: ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 22) நடைபெறவுள்ளதாக அறக்கட்டளையின் தற்காலிக செயலா் கிருஷ்ண மோகன் தெரிவித்தாா். அன்றைய தினத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் தற்காலிக செயலராக கிருஷ்ண மோகன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்நிலையில், அவரை நிரந்தர செயலராக நியமிப்பது குறித்து வரவுள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜூலை 23-இல் ஆா்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டம்: ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜூலை 23-ஆம் தேதி துறவிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆா்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி அழைப்பு விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.